Freelancer / 2023 ஜூலை 22 , பி.ப. 07:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
இளைஞனின் தாக்குதலுக்கு இலக்காகி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யச் சென்ற முதியவர் , பொலிஸ் நிலையத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் - கொட்டடி பகுதியை சேர்ந்த செல்வரத்தினம் ஹரிச்சந்திரன் (வயது 66) என்பவரே நேற்று உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாண நகர மத்தி பகுதியில் ஓடுகள் விற்பனை செய்யும் கடையொன்றினை உயிரிழந்த முதியவர் நடாத்தி வந்திருந்தார். அவரிடம் ஓடு வாங்கிய இளைஞன் ஒருவர் , மிகுதி பணத்தினை வழங்காது காலம் கடத்தி வந்துள்ளார்.
அந்நிலையில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இளைஞனுக்கும் முதியவருக்கு இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதில் , இளைஞன் முதியவரை தாக்கியுள்ளார்.
தான் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யச் சென்ற முதியவர் , பொலிஸ் நிலையத்தினுள் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
முதியவரின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் , முதியவரை தாக்கிய இளைஞனை பொலிஸார் கைது செய்து , பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். R
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025