Shanmugan Murugavel / 2022 பெப்ரவரி 24 , பி.ப. 11:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ். தில்லைநாதன், எம். றொசாந்த், எஸ். நிதர்ஷன்

யாழ்ப்பாணம் வதிரியில் ஹன்டர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதுண்டு ஏற்பட்ட விபத்தில் இளைஞர் ஒருவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரிக்கு முன்பாக இன்று பிற்பகல் 12.55 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றது.
சம்பவத்தில் துன்னாலை கோவில் சந்தை பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞனே உயிரிழந்தார்.
ஹன்டர் வாகனம் வீதியில் பயணித்த வேளை, எதிரே மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன், தனது கட்டுப்பாட்டையிழந்து வீதியின் மறுபக்கத்தில் பயணித்த வாகனத்துடன் மோதி விபத்து ஏற்பட்டதாக ஆரம்ப விசாரணைகளில் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
7 minute ago
11 minute ago
16 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
11 minute ago
16 minute ago