Niroshini / 2021 ஜூலை 15 , பி.ப. 01:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
யாழ்ப்பாணம் பஸ் நிலையத்துக்கு முன்பாக, நாளை (16) கவனயீர்ப்புப் போராட்டமொன்றுக்கு இலங்கை ஆசிரியர் சங்கத்தால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொது செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டோரின் சட்டவிரோத கைது, கல்வியில் இராணுவ மயமாக்கல், கல்வியை தனியார் மயப்படுத்தல் ஆகியவற்றுக்கு எதிராகவே, நாளை காலை 10 மணிக்கு, யாழ்ப்பாணம் பஸ் நிலையத்துக்கு முன்பாக, இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அரசின் அடக்குமுறை மற்றும் சர்வாதிகார போக்குக்கு எதிராக முன்னெடுக்கப்படவுள்ள இந்தப் போராட்டத்துக்கு ஆர்வமுடைய அனைவரும் கலந்துகொண்டு வலுசேர்க்குமாறும், ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
30 minute ago
35 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
35 minute ago
4 hours ago