Editorial / 2020 ஜனவரி 14 , பி.ப. 04:37 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்
யாழ்ப்பாணம் நகர் மத்தியில் பௌத்த கொடி ஒன்று கட்டப்பட்டு, மலர் சூட்டப்பட்டமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
யாழ். மத்திய பஸ் நிலையம் முன்பாக உள்ள வீதியின் நடுவே கற்கள் மற்றும் இரும்பு குழாய்கள் கொண்டு வந்து போடப்பட்டு, அதன் மீது பௌத்த கொடி ஒன்று கட்டப்பட்டு மலர் சூட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அருகில் இருந்த கடை உரிமையாளர்கள் தெரிவிக்கையில்,
“இங்கு நிறுவப்படடுள்ள கொடி மற்றும் கற்கள் கம்பிகள் எவையும் இங்கு காணப்படவில்லை. எங்கிருந்தோ கொண்டு வரப்பட்டுள்ளன. இது, நேற்று நள்ளிரவு நிறுவப்பட்டுள்ளது. நாங்கள் காலையில் வரும்போதே இது காணப்பட்டது” எனத் தெரிவித்தனர்.
51 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
1 hours ago