Niroshini / 2021 டிசெம்பர் 15 , மு.ப. 11:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செந்தூரன் பிரதீபன்
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்றுகொண்டிருந்த ரயிலுடன், இளைஞன் ஒருவர் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளார்.
இவ்விபத்து, சாவகச்சேரி வைத்தியசாலைக்கு முன்பாக, இன்று (15) காலை 9 :45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மட்டுவில் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய இளைஞனே, இவ்வாறு படுகாயங்களுக்குள்ளானார். இவர், செவிப்புலன் அற்றவர் என தெரிவிக்கப்படுகின்றது.
படுகாயமடைந்த இளைஞன், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
ரயில் தண்டவாளத்தின் கீழிருந்து மதுபானம் அருந்தி கொண்டிருந்த பொழுது, யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி வந்த ரயில், இவரை மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.
55 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
1 hours ago
2 hours ago