2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

’லங்கா சமசமாஜ கட்சி வடக்கிலும் வேட்பாளர்களை களமிறக்கும்’

Editorial   / 2020 பெப்ரவரி 02 , பி.ப. 01:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

பொதுத் தேர்தலில், லங்கா சமசமாஜ கட்சி வடக்கிலும் வேட்பாளர்களை களமிறக்கவுள்ளதாக தெரிவித்த அக்கட்சியின் பொதுச்செயலாளரும் வட மத்திய மாகாண ஆளுநருமான திஸ்ஸ விதாரண, வடக்கில் வாழும் தமிழ் மக்கள் ஐக்கிய தேசிய கட்சி,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் போலிப் பிரச்சாரங்களை நம்பி ஏமாறது எமக்கு வாக்களித்து மஹிந்த தலைமையிலான அரசாங்கத்தை பலப்படுத்த அணிதிரளுமாறும் அழைப்பு விடுத்தார்.

யாழ் ஊடக அமையத்தில், இன்று நடத்திய ஊடகவியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தனவெனவும் இந்த போலியான பிரசாரங்களை ஐக்கிய தேசியக் கட்சியே செய்ததாகவும் கூறினார்.

இது தொடர்பில் பொய்யான கருத்துக்களை வெளியிட்ட அரசியல் பிரமுகர் ஒருவருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது எனவும், அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .