2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

விபத்தில் காயமடைந்த கூடைப்பந்தாட்ட வீரன் மரணம்

Thipaan   / 2015 நவம்பர் 25 , மு.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-  குணசேகரன் சுரேன்

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை வீதியில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை (25) காலை உயிரிழந்தார்.

கொக்குவில் மத்திய சனசமூக நிலைய விளையாட்;டுக்கழக கூடைப்பந்தாட்ட அணியின் தலைவரான பி.மயூரன் (வயது 23) என்பவரே உயிரிழந்துள்ளார்.

கே.கே.எஸ். வீதியில் அரசடி சந்திப் பகுதியில் கடந்த திங்கட்கிழமை (23) மோட்டார் சைக்கிளும் முச்சக்கரவண்டியும் மோதிய விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

மூளையில் இரத்தச் கசிவு ஏற்பட்டமையால், அங்கு சிகிச்சை பலனின்றி புதன்கிழமை(25) உயிரிழந்தார்.

சடலம் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0

  • erick👫suriya Friday, 27 November 2015 02:13 AM

    rest in peace bro AMEN

    Reply : 0       0

    erick👫suriya Friday, 27 November 2015 02:14 AM

    rest in peace bro AMEN

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X