2025 ஜூலை 30, புதன்கிழமை

வடக்கில் முதலீடுகளை மேற்கொள்ள நடவடிக்கை வேண்டும்

Gavitha   / 2015 செப்டெம்பர் 22 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் வடமாகாண அமைச்சர்கள் வெளிநாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயங்களை மேற்கொண்டு, அங்குள்ள முதலீட்டாளர்களுடன் கலந்துரையாடி வடக்கில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடமாகாண சபை பிரதி அவைத்தலைவர் ம.அன்ரனி ஜெகநாதன் தெரிவித்தார்.

வடமாகாண சபை மாதாந்த அமர்வு, கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் இன்று செவ்வாய்க்கிழமை (22) நடைபெற்ற போது, வடமாகாணத்தில் வேலையற்றவர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தப்படவேண்டும் என்பது தொடர்பில் இடம்பெற்ற கருத்துப்பரிமாறலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

நான் அறிந்த வரையில் முதலமைச்சர் ஒரு தடவை சென்றுள்ளார். அமைச்சர்கள் எவரும் உத்தியோகபூர்வ விஜயங்களை மேற்கொள்ளவில்லை. வெளிநாட்டு விஜயங்களை மேற்கொண்டு அங்குள்ள முதலீட்டாளர்களை இங்கு முதலீடு செய்ய தூண்டுவதன் மூலம் இங்கு தொழில் வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்படும். இதனால் வேலையற்றவர்கள் என்பது இல்லாமல் போகும் என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .