Gavitha / 2021 மார்ச் 07 , பி.ப. 02:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
வடக்கு மாகாணத்தில், மேலும் நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது என, வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று (06) 457 பேரின் மாதிரிகள், பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
அவர்களில், மன்னார் பொது வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
இதேவேளை, மன்னாரில் நேற்று (06) காலை காலை ரயிலில் மோதி உயிரிழந்த 58 வயதுடைய நபரின் சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில், அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, கிளிநொச்சி கரைச்சி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட அக்கராயன்குளத்தில் இருவருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அவர்கள் இருவரும் மல்லாவியில் இடம்பெற்ற இறுதிச் சடங்கு ஒன்றுக்குச் சென்று திரும்பிய நிலையில், சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர் என, தெரிவிக்கப்படுகின்றது.
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025