2025 மே 24, சனிக்கிழமை

வடக்கை கவனிப்பதில்லை என்ற கருத்துக்கு இடமில்லை

Editorial   / 2022 பெப்ரவரி 27 , பி.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.அகரன்

இந்த நாட்டின் பிரஜை என்றவகையில் எந்தவொரு பகுதியிலும் வாழ்வதற்கான உரிமை அனைவருக்கும் இருப்பதாக காணி அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார்.

வன்னி மாவட்ட காணிப் பிரச்சினைகள் தொடர்பான நடமாடும் சேவை, வவுனியாவில் இன்று (27) இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், “காணி என்ற விடயம் மிகவும் முக்கியமானது. அதன் ஆவணங்கள் என்பது ஒருவரது வாழ்வின் பல்வேறு தேவைகளுக்கு முக்கியமாக காணப்படுகின்றது. வடக்கு மக்களை நாம் கவனிப்பதில்லை என்ற குறைபாடு சொல்லும் கருத்துகளும் உண்டு. அந்தக் கருத்துகளுக்கு ஒருபோதுமே இடமில்லை.

“இன, மத வேறுபாடில்லாமல் வடபுலம், தென்புலம் என்ற பேதங்கள் இல்லாமல் காணி தொடர்பான பிரச்சினைகளை தீர்க்கவேண்டும் என்ற உயரிய நோக்கோடு, இந்தச் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது.

“இங்கு வாழ்கின்ற பொதுமக்கள் என்ற வகையில் நாட்டில் பிறந்தவர்கள் என்ற வகையில் அவர்களுக்கு இந்த நாட்டிலே எந்தவொரு இடத்திலும் குடியிருப்பதற்கும், வீடொன்றைக் கட்டுவதற்கும், வியாபாரத்தை ஆரம்பிப்பதற்கும் உரித்து இருக்கின்றது. இந்த விடயத்தில் எந்த வேறுபாடுகளும் பார்க்க முடியாது. அனைவருமே சமமாக மதிக்கப்பட வேண்டும்” என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X