Freelancer / 2022 ஓகஸ்ட் 08 , மு.ப. 09:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
யாழ்ப்பாணத்தில் எரிபொருள் வரிசையில் நிறுத்தப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிளின் ஒயில் டேங்கிக்குள் சிலர் மண்ணை அள்ளி கொட்டியுள்ளனர்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
யாழ். நகர் மத்தியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் எரிபொருளை பெற்றுக்கொள்ளும் நோக்குடன் இளைஞர் ஒருவர் தனது பெறுமதி மிக்க நவீன ரக மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு இரவு வீடு சென்றுள்ளார்.
மறுநாள் காலை எரிபொருள் விநியோகிக்கும் போது, வரிசையில் நின்று தனது மோட்டார் சைக்கிளுக்கு எரிபொருளை நிரப்பியுள்ளார்.
எரிபொருளை நிரப்பிய பின்னர் மோட்டார் சைக்கிளை இயக்கி ஓடிய போது அதன் இயந்திர சத்தம் மாற்றம் அடைந்து வித்தியாசத்தை உணர்ந்துள்ளார்.
அதனை அடுத்து அவர் தனது மோட்டார் சைக்கிளை திருத்த கொண்டு சென்று சோதனை செய்த போதே, மோட்டார் சைக்கிளின் ஓயில் டேங்கினுள் விஷமிகள் மண்ணை அள்ளி போட்டு இருந்தமை தெரிய வந்தது.
ஓயில் டேங்கினுள் மண்ணை போட்டமையால் மோட்டார் சைக்கிளின் இயந்திரத்தின் உட்பாகங்கள் பழுதடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (R)
4 minute ago
43 minute ago
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
43 minute ago
55 minute ago
1 hours ago