Shanmugan Murugavel / 2022 ஜனவரி 11 , பி.ப. 03:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
- என். ராஜ், செந்தூரன் பிரதீபன்

வலிகாமம் கிழக்கு பிரதேச சபை முன்றலில் பிரதேச சபை செயலாளரை அச்சுறுத்தியவரை கைது செய்ய கோரி கவனயீர்ப்பு போராட்டம் நேற்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
கடந்த சனிக்கிழமை வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் சட்ட விரோதமாக மதில் அமைக்கப்படுவது தொடர்பில் கிடைக்கப் பெற்ற முறைப்பாடு தொடர்பில் பார்வையிடச் செயலாளர் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர் அவ்விடத்துக்குச் சென்றுள்ளனர்.
முறைப்பாட்டுடன் தொடர்புடையவர் செயலாளரை அச்சுறுத்தி அவருடைய கைத்தொலைபேசியை பறித்து உடைத்து அச்சுறுத்தி தொலைபேசியை எடுத்துச் சென்றுள்ளார். அது தொடர்பில் அச்சுவேலி பொலிஸில் முறைப்பாடு பதியப்பட்டுள்ளது. எனினும் குறித்த நபர் வெளிநாட்டுப் பிரஜை எனவும் தற்போது அவர் நாட்டை விட்டு வெளியேறி உள்ளதாகவும் குறித்த நபரை உடனடியாகக் கைது செய்ய கோரி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago