Freelancer / 2022 ஓகஸ்ட் 05 , மு.ப. 09:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.அகரன்
தேசிய எரிபொருள் அட்டையை பயன்படுத்தி (QR) எரிபொருள் விநியோக நடவடிக்கையில் தேசிய ரீதியில் வவுனியா வேப்பங்குளம் பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் முதலாமிடம் பெற்றுள்ளது.
நாடு பூராகவும் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு தீர்வு காணும் முகமாக தேசிய எரிபொருள் அட்டையை எரிசக்தி அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் பரீட்சார்த்த நடவடிக்கைகள் 31 ஆம் திகதி வரை இடம்பெற்றது.
31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் தேசிய எரிபொருள் அட்டையை பயன்படுத்தி எரிபொருள் விநியோகத்தில் ஈடுபட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களை எரிசக்தி அமைச்சு வரிசைப்படுத்திப் உள்ளது.
அதன்படி, வவுனியா வேப்பங்குளம் பகுதியில் அமைந்துள்ள ஜி.எச்.ஏ.டீ. சில்வா எரிபொருள் நிரப்பு நிலையம் தேசிய ரீதியில் முதலாமிடம் பெற்றுள்ளது.
இரண்டாம் இடத்தை அனுராதபுரத்தில் உள்ள டபிள்யூ.எம்.டீ.கே.உயன்வத்தை எரிபொருள் நிரப்பு நிலையமும், மூன்றாம் இடத்தை யாழ்ப்பாணம் கொக்காவில் பகுதியில் அமைந்துள்ள ஜெயபிரணவன் எரிபொருள் நிரப்பு நிலையமும் பெற்றுள்ளன.
40 minute ago
44 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
44 minute ago
2 hours ago