2025 மே 20, செவ்வாய்க்கிழமை

வாளுடன் ஒருவர் கைது

Editorial   / 2018 ஒக்டோபர் 15 , மு.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன்

உடுவில் பகுதியில் உள்ள வீடு ஒன்றினுள் அதிரடிப்படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடமிருந்து வாள் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், மானிப்பாய் பொலிஸ் பிரிவுகளில் அண்மைக்கால முன்னெடுக்கப்பட்ட வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய உடுவில் பகுதியில் வசிக்கும் இளைஞன் ஒருவர் தொடர்பில் சிறப்பு அதிரடிப்படையினருக்குத் தகவல் கிடைத்தது.

அதுதொடர்பில் இளைஞனின் வீடு சிறப்பு அதிரடிப்படையினரால் நேற்று (14) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சோதனையிடப்பட்டது. அதன்போது வீட்டுக்குள் மறைத்துவைக்கப்பட்டிருந்த வாள் ஒன்று மீட்கப்பட்டது.

அதனை வீட்டுக்குள் மறைத்து வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு 2014 ஆம் ஆண்டு தொடக்கம் வாள்வெட்டு வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டமை தொடர்பான குற்றச்சாட்டுக்களில் வழக்குகள் உள்ளன.

இறுதியாக 2017ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நீதிமன்றப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஆவா குழுவைச் சேர்ந்த இவர், வாள்வெட்டு வன்முறைகளில் ஈடுபடுவோரில் முக்கியமானவர். சந்தேகநபர் சிறப்பு அதிரடிப் படையினரால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X