Editorial / 2017 நவம்பர் 27 , மு.ப. 11:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
வாளுடன் மோட்டார் சைக்கிளில் சுற்றிய இரண்டு இளைஞர்கள் சாவகச்சேரி பொலிஸாரினால் இன்று அதிகாலை (27) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சாவகச்சேரி பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது , மட்டுவில்-சிவன்கோவில் வீதியில் அதிகாலை 3.20 மணியளவில் குறித்த இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட இருவரும் சாவகச்சேரியைச் சேர்ந்த 21 மற்றும் 22 வயதானவர்கள் என்றும்,இவர்கள் இன்றைய தினம்(27) சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளுக்குரிய அனுமதிப்பத்திரமும் இவர்களிடம் காணப்படவில்லை என்றும், ஏதேனும் குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்காக இவர்கள் சென்றிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
15 minute ago
18 minute ago
39 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
18 minute ago
39 minute ago
1 hours ago