2025 மே 05, திங்கட்கிழமை

வாள்முனையில் நகை அபகரிப்பு

Niroshini   / 2021 மே 17 , பி.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-டி.விஜித்தா

 

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சித்தங்கேணி பகுதியில் உள்ள வீடொன்றில், இன்று (17) அதிகாலை 3.30 மணியளவில், நகைகள் அபகரிக்கப்பட்டுள்ளன.

இரு வயோதிபப் பெண்கள் வசித்த வீடொன்றுக்குள், நேற்று அதிகாலை, மோட்டார் சைக்கிளில் வாளுடன்  வந்த இனந்தெரியாத இருவர் புகுந்து, அங்குள்ள வயோதிபப் பெண் ஒருவரை வாள்முனையில் அச்சுறுத்தி, அவர் அணிந்திருந்த  தோடு மற்றும் மோதிரத்தை அபகரித்து, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X