2025 மே 19, திங்கட்கிழமை

வாள்வெட்டு தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு : மூவர் படுகாயம்

Editorial   / 2018 ஒக்டோபர் 29 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.றொசாந்த், டி.விஜிதா

யாழ்.குடத்தனை பகுதியில் இன்று (29) அதிகாலை வீடுகளுக்குள் புகுந்த நபர் ஒருவர் உறக்கத்திலிருந்தவர்கள் மீது வாள்வெட்டுத்தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.

இத்தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த பகுதியில் உள்ள வீடொன்றினுள் அதிகாலை புகுந்த தாக்குதலாளி வீட்டில் உறக்கத்தில் இருந்த பரம்சோதி ஜெயஸ்ரீ (வயது 66) என்பவர் மீதும் அவரது மனைவி ப.நிர்மலாதேவி (வயது 53) என்பவர் மீதும் தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.

குறித்த வீட்டில் தாக்குதல் மேற்கொண்ட பின்னர் அங்கிருந்து சுமார் 100 மீற்றர் தூரத்தில் உள்ள வீட்டினுள் புகுந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.

அதில் எம்.சித்திரவடிவேல் (வயது 50) அவரது மனைவி சி.ஜெயந்தி (வயது 40) ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X