எம். றொசாந்த் / 2018 ஒக்டோபர் 31 , மு.ப. 06:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்.குடத்தனை வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
வடமராட்சி கிழக்கு குடத்தனை மாளிகைத்திடல் கிராமத்தில் திங்கட்கிழமை (29) அதிகாலை 2 வீடுகளுக்குள் புகுந்த தாக்குதலாளி ஒருவர் வீட்டில் உறக்கத்தில் இருந்தவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டிருந்தார்.
குறித்த தாக்குதல் சம்பவத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றும் இரண்டு பெண்கள் உட்பட மூவர் படுகாயம் அடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.
குறித்த தாக்குதல் சம்பவத்தை அக்கிராமத்தை சேர்ந்த தர்சன் எனும் நபரே மேற்கொண்டார் என சம்பவம் இடம்பெற்ற வீடுகளின் அயலவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்து இருந்தனர்.
அந்நிலையில், குறித்த நபரை பொலிஸார் கைது செய்வதுக்காக தேடுதல் நடடிக்கைகளில் ஈடுபட்டு வந்த சமயம் நேற்று (30) மாலை குறித்த சந்தேக நபர் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago