Niroshini / 2020 ஒக்டோபர் 27 , பி.ப. 08:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.ராஜ், எஸ்.நிதர்ஷன்
யாழ். - இராசையா வீதியில், சற்றுமுன்னர் இடம்பெற்ற விபத்தில், ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
வசாவிளான் பகுதியை சேர்ந்த தனபாலசிங்கம் லஷ்ச தீபன் (வயது 34) என்பவரே, இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.
யாழ்ப்பாணம் - அச்சுவேலி பகுதியில் இருந்து இராச வீதி ஊடாக பயணித்துக் கொண்டிருந்த காரென்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்துடன் மோதுண்டே, இவ்விபத்து சம்பவித்துள்ளது.
இதன்போது, காரை செலுத்தி சென்ற குறித்த நபர், ஸ்தலத்திலேயே உயிரிழந்தார்.
அத்தடன், அவருடன் பயணம் செய்த சிவன் சரலதீபன் (வயது 23) என்ற இளைஞன் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. குறித்த விபத்து தொடர்பில், அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
48 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
2 hours ago
4 hours ago