Freelancer / 2023 நவம்பர் 15 , பி.ப. 02:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கிய இளைஞன் , சிகிச்சை பலனின்றி ( செவ்வாய்க்கிழமை 14) உயிரிழந்துள்ளார்
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியை சேர்ந்த நிலக்சன் (வயது 18) எனும் இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த 09ஆம் திகதி குறித்த இளைஞன் 14 வயது சிறுவனுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது யாழ்ப்பாணம் பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளிள் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மதிலுடன் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் இருவரும் படுகாயமடைந்து, யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மேலும் சிறுவன் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக தெரியவந்துள்ளது.
4 minute ago
13 minute ago
22 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
13 minute ago
22 minute ago
32 minute ago