Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எம். றொசாந்த் / 2019 ஜனவரி 31 , பி.ப. 04:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
கோப்பாய் பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட வீடுகள், நிறுவனங்கள், வர்த்தக நிலையங்களின் உள்ளவர்களின் விபரங்களை பொலிஸார் சேகரித்து வருகின்றனர்.
குறித்த பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட வீடுகள், நிறுவனங்களுக்கு இன்று (31) காலை சிவில் உடைகளில் சென்றவர்கள் தம்மை பொலிஸார் என அடையாளப்படுத்தி, குடும்ப விபரங்களை கோரும் படிவங்களை உரிமையாளர்களிடம் கையளித்து அதனை நிரப்பி தருமாறு கோரி படிவங்களை நிரப்பி எடுத்து சென்றுள்ளனர்.
சில வீடுகளில் வீட்டு உரிமையாளர்கள் இல்லை என கூறப்பட்ட போது, வீட்டு உரிமையாளர் வந்ததும் இந்த படிவங்களை நிரப்பி இன்று மாலைக்குள் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் படிவங்களை ஒப்படைக்க வேண்டும் என அச்சுறுத்தும் தொனியில் கூறி சென்றுள்ளனர்.
இதவேளை சில வீட்டு உரிமையாளர்கள் எதற்காக விபரங்களை கோருகின்றீர்கள் என கேட்ட போது, தமக்கு எதுவும் தெரியாது எனவும் கொழும்பில் இருந்து இந்த படிவம் வந்தது, அவர்களின் உத்தரவின் பேரில் தான் தாம் விபரங்களை கோருவதாக சிவில் உடையில் தம்மை பொலிஸார் என அடையாளப்படுத்திய நபர்கள் கூறியுள்ளனர்.
வீட்டு உரிமையார்களிடம் விபரம் சேகரிக்க கொடுக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தில் “குடியிருப்பாளர் விபர அட்டவணை - பொலிஸ் கட்டளை சட்டத்தின் 76ஆம் பிரிவின் கீழ் செய்யப்படும் கூற்று" என உள்ளது.
பொலிஸார் திடீரென சிவில் உடையில் குடும்ப விபரம் சேகரிப்பது மக்கள் மத்தியில் ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது
19 minute ago
34 minute ago
54 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
34 minute ago
54 minute ago
59 minute ago