2025 மே 01, வியாழக்கிழமை

வீட்டில் திருட்டுப் போன மோட்டார் சைக்கிள் கோவிலில் மீட்பு

Editorial   / 2022 பெப்ரவரி 13 , பி.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ். தில்லைநாதன்

வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், இனந்தெரியாத நபர்களால் திருடிச் செல்லப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்று, கோவிலின்  முன்பாக இருந்து இன்று (13) காலை மீட்க்கப்பட்டுள்ளது.

கடந்த வியாழக்கிழமை 10ஆம் திகதி, மேலைப் புலோலி, தம்பசிட்டி பகுதியில் உள்ள வீடொன்றின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மேற்படி மோட்டார் சைக்கிள் இனந்தெரியாத நபர்களால்  திருடப்பட்டுள்ளது.

இது தொடர்பில், பருத்தித்துறை  பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில், தம்பசிட்டி கண்ணகி அம்மன் கோவிலுக்கு முன்பாக மேற்படி மோட்டார் சைக்கிள் அனாதரவாக காணப்படுவதாக, பருத்தித்துறை பொலிஸாருக்கு இன்று தகவல் வழங்கப்பட்ட நிலையில், மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .