2025 மே 15, வியாழக்கிழமை

வீதி முகப்பில் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன

Editorial   / 2020 ஜனவரி 28 , பி.ப. 01:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழ்ப்பாணம் மாநகர சபை, நல்லூர் பிரதேச செயலகம் அமைந்துள்ள இடத்தில் இருந்து சுமார் 50 மீற்றர் தூரத்தில் உள்ள வீதி முகப்பில் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன.

இவ்வாறு குப்பைகள் கொட்டப்படும் பகுதியின் முன்புறத்தில் சி.சி.டி.வி கமெரா பொருத்தப்பட்டுள்ளது. அத்துடன், “இவ்விடத்தில் குப்பைகளைப் போட வேண்டாம். அடையாளம் காணுமிடத்து, தகுந்த தண்டையை அனுபவிக்க நேரிடும்” என அறிவுறுத்தல் எழுத்தப்பட்ட பதாகையும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த அறிவுறுத்தல் பதாகையின் கீழ், குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .