2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

ஹோட்டல் கற்கைநெறி அங்குரார்ப்பணம்

Princiya Dixci   / 2015 நவம்பர் 24 , மு.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிகரம் ஹோட்டல் பாடசாலை, இங்கிலாந்து சண்டர்லண்ட் பல்கலைக்கழக சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் முகாமைத்துவ கற்கைநெறி அங்குரார்ப்பண நிகழ்வு, யாழிலுள்ள விருந்தினர் விடுதியில் கடந்த 19ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது.

சிகரம் பணிப்பாளர் கோ.றுஷாங்கன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், வெளிநாட்டுப் பல்கலைக்கழகப் பிரதிநிதி ஷமிம், இங்கிலாந்து சண்டர்லண்ட் பல்கலைக்கழக சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் முகாமைத்துவ கற்கைநெறி தொடர்பான விளக்கத்தை வழங்கினார்.

தொடர்ந்து, பிரித்தானியாவில் உயர்கல்வி தொடர்பாக, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பிரித்தானியப் பிரஜையான பொறியியலாளர் சூரியசேகரம் விளக்கவுரையாற்றினார்.

மலேசியாவில் உயர்கல்வி வாய்ப்புக்கள் தொடர்பாக, மலேசிய விஞ்ஞானப் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டம் பெற்ற, யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி ஜீவசுதன் விளக்கிக் கூறினார்.

மலேசிய சன்வே பல்கலைக்கழக ஹோட்டல் முகாமைத்துவ பட்டதாரியும், கிறீன் கிறாஸ் ஹோட்டலின் முகாமையாளருமான கார்த்திக், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் முகாமைத்துவத் துறைகளில் உலகளாவிய ரீதியிலும், இலங்கையிலும் பெருகிவரும் வேலைவாய்ப்புக்கள் தொடர்பாக விளக்கிக் கூறினார்.

தொடர்ந்து, வெளிநாடு சென்று ஹோட்டல் முகாமைத்துவம் கற்கைநெறியைத் தொடர்வதற்கு சிகரம் மூலம் அனுமதி பெற்ற 5 மாணவர்களுக்கு, வெளிநாட்டுப் பல்கலைக்கழகப் பிரதிநிதி பல்கலைக்கழக அனுமதிக் கடிதங்களை வழங்கி வைத்தார்.

அத்துடன், யாழ்ப்பாணத்தில் ஹோட்டல் தொழில் முயற்சியாண்மையில் ஆற்றிவரும் சிறந்த சேவைகளுக்காக, கிறீன் கிறாஸ்-வலம்புரி ஹோட்டல் உரிமையாளர் ஜெகசீலன் சிகரம் நிறுவனத்தினரால் விசேட விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X