Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2021 ஏப்ரல் 11 , பி.ப. 03:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.விஜித்தா
யாழ்ப்பாணம், ஆஸ்பத்திரி வீதியில் உள்ள தனியார் ஹொட்டலில் சட்டவிரோதமாக மதுபானத்துக்குள் எதனோலை (Ethanol) கலந்து விற்பனை செய்த குற்றச்சாட்டில், அந்த ஹொட்டலின் முகாமையாளர், இன்று (11) கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரே அவரைக் கைதுசெய்துள்ளனர்.
சட்டவிரோதமான முறையில் மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக போலஸஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், சுமார் 300க்கும் மேற்பட்ட பரல்கள் குறித்த ஹொட்டலில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனையடுத்து கைதுசெய்யப்பட்ட முகாமையாளரை, யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .