2025 மே 21, புதன்கிழமை

புத்தளம் தள வைத்தியசாலை மனநல சிகிச்சை பிரிவு தற்போது 5 நாட்கள் இயங்குகிறது

Kogilavani   / 2013 மார்ச் 06 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம். ஹிஜாஸ்

புத்தளம் தள வைத்தியசாலையில் தற்போது மனநல சிகிச்சை பிரிவு வாரத்தில் 5 நாட்களும் இயங்குவதாகவும் அப்பிரிவில் விசேட வைத்திய நிபுணர், வைத்தியர்கள் இருவர் உட்பட 4 பேர் கடமையாற்றுவதாக புத்தளம் தள வைத்தியசாலை அத்தியட்சகர் அசோக் பெரேரா தெரிவித்தார்.

புத்தளம் தள வைத்தியசாலையில் கடந்த காலங்களில் வாரத்தில் 2 நாட்கள் மாத்திரமே இப் பிரிவு இயங்கி வந்தது.

இப்பிரிவினூடாக போதைப்பொருள் பாவனைக்குட்பட்டவர்களுக்கும் உளரீதியான சிகிச்சை வழங்கப்படுவதாகவும் தேவையாயின் நோயாளர்களின் வீடுகளுக்கு சென்றும் வைத்தியர்களினால் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் வைத்தியசாலை அத்தியட்சகர் அசோக் பெரேரா மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .