2025 மே 22, வியாழக்கிழமை

விபசார விடுதி நடத்தி வந்த பெண் உட்பட 3 யுவதிகள் கைது

Kogilavani   / 2013 ஜனவரி 07 , மு.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம். சீ. சபூர்தீன்)             
அநுராதபுரம் புபுதுபுர பகுதியில், வீடொன்றினுள் விபசார விடுதியினை  நடத்திச் வந்த பெண்ணொருவர் மற்றும் விபசார தொழிலில் ஈடுபட்ட 3 யுவதிகளை அநுராதபுரம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட யுவதிகள் 19, 20, 22 வயதுகளையுடையவர்கள் என்றும் இவர்கள் கெப்பித்திகொள்ளாவ, மாத்தளை மற்றும் கண்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் மூலம் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட பெண் இதற்கு முன்னர் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அநுராதபுரம் கோட்டத்திற்குப் பொறுப்பான பொலிஸ் அதிகாரி மஹேஷ் சேனாரத்னவின் ஆலோசனையின் பேரில் இக்கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X