2025 மே 22, வியாழக்கிழமை

நாய் கடிக்கு உள்ளாகுவோரின் சிகிச்சைக்காக 36 மில்லியன் ரூபா நிதி செலவு

Kogilavani   / 2013 பெப்ரவரி 01 , மு.ப. 06:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். சீ. சபூர்தீன்                

வடமத்திய மாகாணத்தில் நாய்க் கடிக்கு உள்ளாகுவோரின் சிகிச்சைக்காக வருடமொன்றுக்கு 36 மில்லியன் ரூபா நிதி செலவாகுவதாக வடமத்திய மாகாண சுகாதார சேவைகள் அமைச்சர் எச்.பீ.சேமசிங்க தெரிவித்தார்.

'நாய் கடிக்கு உள்ளான பின்னர் ஏற்றப்படும் தடுப்பூசிகளுக்கு மக்களின் பெருமளவிலான நிதி செலவு செய்யப்படுகிறது.
அநுராதபுரம் நகரத்தில் மட்டும் 8000 கட்டாக் காலி நாய்கள் உள்ளன.

நாய்க்கடிக்கு உள்ளாகுவோரின் தொகையில் வீழ்ச்சியை ஏற்படுத்தி அதற்காக செலவளிக்கப்படும் நிதியை அடுத்த 2 வருடங்களுக்குள் 90 வீதமாகக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன் ஒரு கட்டமாக அநுராதபுரம் எலயாபத்தவ, நெல்லிகுளம் பகுதியில் நாய்களுக்கான இல்லமொன்றை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது' எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X