2025 மே 22, வியாழக்கிழமை

காதலியை கொலை செய்தவருக்கு 18ஆம் திகதி வரை விளக்கமறியல்

Super User   / 2013 ஜனவரி 16 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

கெப்பித்திகொல்லாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹந்தகல, விஸ்ஸவெல பகுதியில் யுவதியொருவரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவத்துடன் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட வரை எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கெப்பித்திகொல்லா நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

ஹந்தகல வீதியின் விஸ்ஸவெல பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே இவ்வாறு விளக்;கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த 10ஆம் திகதி யுவதியை அவரது வீட்டுக்கு முன்னால் இழுத்துச் சென்று கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு சந்தேக நபர் தலைமறைவாகியிருந்தார்.

இருவரும் 3 வருடமாக காதல் தொடர்பு வைத்திருந்ததோடு இத்தொடர்பு கடந்த சில மாதங்களாக துண்டிக்கப்பட்டுள்ளதால் ஆத்திரமடைந்த காதலன் காதலியை கொலை செய்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரனைகளில் தெரியவந்துள்ளது.

கெப்பித்திகொள்ளாவ பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பிரபாத் கால்லகேயின் வழிகாட்டலின்கீழ் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X