2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

புத்தளத்தில் ஆயுதங்கள் மீட்பு: 8 பேர் கைது

Super User   / 2011 நவம்பர் 10 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(இர்ஷாத் றஹ்மத்துல்லா, ஹிரான் பிரியங்கர ஜயரத்ன)

புத்தளம் பிரதேசத்தில் பொலிஸார், இரானுவம் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து இன்று வியாழக்கிழமை மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது ஒரு தொகை ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சோதனை நடவடிக்கை காலை 5 மணி தொடக்கம் 10 மணி வரை புத்தளம் வான் வீதி, மலேரியா அலை வீதி மற்றும் மன்னார் வீதியின் ஒரு பகுதியில் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, ரி - 56 ரக துப்பாக்கி மற்றும் அதற்கான ரவைகள், ரிபிட்டர் துப்பாக்கி, மற்றும் கைகுண்டொன்று, கூரிய கத்திகள் மற்றும் இராணுவ உடைகள் உட்பட பல பொருட்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

19 இடங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்ட நிலையில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X