2025 மே 21, புதன்கிழமை

வெடியில் சிக்கிய 2 சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

Super User   / 2013 ஏப்ரல் 22 , மு.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.ஹிஜாஸ்

புத்தளம், நவகத்தேகம பகுதியில் காட்டு யானைகளினை விரட்டுவதற்காக வெடியினை கொளுத்திய போது காயமடைந்த இரண்டு சிறுமியர்கள் புத்தளம் தள வைத்தியசாலையில்; நேற்று ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளனர். 10 வயதான இந்த இரண்டு சிறுமியர்களும் உறவினர்களெனவும் எனவும் பொலிசார் தெரிவித்தனர்.

சிறுமியர்கள் இருவரும் காட்டு யானையின் அச்சம் காரணமாக வீட்டின் முன் பக்கம் வெடியினை கொளுத்தியுள்ளனர். இதன்போது எதிர்பாராத விதமாக வெடி திடீரென வெடித்ததினால் குறித்த சிறுமியர்கள் இருவரும் காயமடைந்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

காயமடைந்த சிறுமியர்களில் ஒருவருக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X