2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

அநுராதபுரத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 104 சந்தேக நபர்கள் கைது

Suganthini Ratnam   / 2011 நவம்பர் 13 , மு.ப. 07:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆகில் அஹமட்)

அநுராதபுரம் மாவட்டத்தில் 22 பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலிருந்து கடந்த 24 மணிநேரத்தில் 104 சந்தேக நபர்களை கைதுசெய்துள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.

வடமத்திய மாகாணத்துக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைக்கிணங்க  22 பொலிஸ் நிலையங்களையும் சேர்ந்த பொலிஸ் அதிகாரிகள் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின்போதே இச்சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டதாக
அநுராதபுரத்திற்கு பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் கித்சிறி தயானந்த கூறினார்.  

இவர்களில் 58 பேர் நீதிமன்றங்களால் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டவர்கள் ஆவர். ஏனையவர்களில் 23 பேர் பல்வேறு  குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் ஆவர். 20 பேர் சிறுகுற்றச் செயல்களுடனும் 3 பேர் சந்தேகத்துக்கிடமாக நடமாடியவர்களெனவும் அவர் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X