2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

சகோதரனை தாக்கியவருக்கு 5 வருட கடூழிய சிறை

Kanagaraj   / 2013 மார்ச் 09 , பி.ப. 01:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். சீ. சபூர்தீன்

தனது சகோதரனை கத்தியால் தாக்கிய பலத்த காயங்களுக்குட்படுத்திய நபர் ஒருவருக்கு 5 வருட கடூழிய சிறைத் தண்டணையை விதித்து வடமத்திய மாகாண மேல் நீதிமன்ற நீதவான் சுசந்த குமார தீர்ப்பளித்தார்.

இதற்கு மேலதிகமாக 25 அபராதத் தொகையையும் பாதிக்கப்பட்ட நபருக்கு 50 ஆயிரம் ரூபா நஷ்டஈட்டுத் தொகையாகவும் செலுத்துமாறும் இதனைச் செலுத்த தவறும் பட்சத்தில் மேலும் 9 மாதங்கள் கடூழிய சிறைத் தண்டணையை வழங்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

இந்த வழக்கு கடந்த வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே அவர் மேற்கண்டவாறு  தீர்ப்பளித்தார்.
2008ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 6ந் திகதி அல்லது அதனை அண்மித்த திகதியொன்றில் சந்தேகநபர் தந்திரிமலை கட்டுப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த தனது சகோதரனை கத்தியால் தாக்கிய காயப்படுத்தியிருந்தார்.

தந்திரிமலை கட்டுகம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவருக்கே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X