2025 ஜூலை 12, சனிக்கிழமை

வடமத்திய மாகாணத்தில் 85 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன

Kogilavani   / 2013 ஜனவரி 23 , மு.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். சீ. சபூர்தீன்

வடமத்திய மாகாணத்தில் இனிமேல் எந்தவொரு பாடசாலையும் மூடப்படமாட்டாது என வடமத்திய மாகாண முதலமைச்சர் ரஞ்சித் சமரகோன் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் வடமத்திய மாகாணத்தில் 85 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.

இதேவேளை 100இற்கும் குறைந்த மாணவர் தொகையைக் கொண்ட 85 பாடசாலைகள் தற்பொழுதும் இயங்குகின்றன.

அதிகளவிலான விவசாய மக்களைக் கொண்ட இம்மாகாணத்தில் இனிவரும் காலங்களில் எந்தவொரு பாடசாலையையும்  மூட இடமளிக்கப்படமாட்டாது.

கல்வித்துறை மேம்பாட்டிற்காக மாகாண சபை புதிய செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .