2025 மே 21, புதன்கிழமை

1,000 ரூபா தாளினை அச்சிட முயன்றோர் கைது

Super User   / 2013 மே 09 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.என்.எம்.ஹிஜாஸ்


புத்தளம், மதுரங்குளி பிரதேசத்தில் சட்டவிரோதமாக 1,000 ரூபா தாளினை அச்சிட தயாராகவிருந்த சந்தேக நபர்கள் 4 பேர் புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலய அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் புத்தளம், நுவரெலியா ஆகிய பிரதேசங்களை சேர்ந்த தலா ஒருவரும் கந்தான பிரதேசத்தினை சேர்ந்த இருவரும் ஆவர். இவர்களிடமிருந்து இரசாயன திரவியங்கள், நான்கு கையடக்க தொலைப்பேசிகள், முச்சக்கர வண்டி உட்பட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

குறித்த சந்தேக நபர்கள் மூன்று இலட்சம் ரூபா பணத்தினை பெற்றுக்கொண்டு பத்து இலட்சம் ரூபா கள்ள நோட்டினை வழங்குவதாக கிடைத்த தகவலினையடுத்து இச் சுற்றி வளைப்பு நடைப்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X