2025 மே 20, செவ்வாய்க்கிழமை

பாடசாலையினுள் 15 வயது மாணவி மீது வல்லுறவு

Menaka Mookandi   / 2013 ஜூன் 25 , பி.ப. 12:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.முஸப்பிர்

15 வயதுடைய பாடசாலை மாணவியை பாடசாலையினுள் வைத்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகச் சொல்லப்படும் இளைஞர் ஒருவரைக் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக பள்ளம பொலிஸார் தெரிவித்தனர்.

சேருகெலே, வதுரெஸ்ஸ எனும் பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதையுடைய பாடசாலை மாணவியான சிறுமியே இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டவராவார்.

இச்சிறுமியுடன் காதல் தொடர்பினை வைத்துக்கொண்டிருந்ததாகக் கூறப்படும் இளைஞன் ஒருவராலேயே மேற்படி மாணவி வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்று பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

சம்பவ தினமான கடந்த 22ஆம் திகதி, பிரத்தியேக வகுப்புக்குச் செல்வதாக வீட்டைவிட்டுப் புறப்பட்டுள்ள சிறுமி, குறித்த இளைஞனை அப்பிரதேச பாடசாலைக்கு வருமாறு தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டு அழைத்துள்ளார்.

பின்னர் தனது விருப்பத்திற்கு மாறாக தன்னை பாலியல் துஷ்பிரயோகம் செய்துவிட்டு அங்கிருந்து அவ்விளைஞன் தப்பிச் சென்றதாகவும் விசாரணைகளில் தெரியவந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

குறித்த இளைஞரான சந்தேகநபர் தற்சமயம் பிரதேசத்தைவிட்டு தலைமறைவாகியிருப்பதாகத் தெரிவிக்கும் பள்ளம பொலிஸார் சந்தேக நபரைக் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாகத் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0

  • AMBI. Tuesday, 25 June 2013 03:59 PM

    ரெண்டு பேரும் சேர்ந்து நடக்கினம், பின்னே அவனை மட்டும் பழி போடுராபோல..?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X