2025 மே 20, செவ்வாய்க்கிழமை

மணல்குன்று பிரதேசத்தில் 20 வீடுகள் அமைப்பு

Kogilavani   / 2013 ஜூன் 25 , மு.ப. 02:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


எம்.என்.எம்.ஹிஜாஸ்


குவைத் நாட்டின் பைத்துல் சகாத் நிறுவனத்தின் உதவியுடன் புத்தளம் பெரிய பள்ளி வாயிலின் மேற்பார்வையில், புத்தளம் ஜமாத்தே இஸ்லாமி அமைப்பினால் வீடற்றவர்களுக்கென 20 வீடுகள் புத்தளம் மணல்குன்று பிரதேசத்தில் அமைக்கப்பட்டு வருகின்றன.

இதற்கான காணி புத்தளம் பெரிய பள்ளியினால் வழங்கப்பட்டுள்ளன. சுமார் 7 பேர்ச்சர்ஸ் பரப்பளவில் இவ் வீடுகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

துரிதமாக நடைபெற்றுவரும் இவ் வீடமைப்பு திட்டம் சுமார் 90 நாட்களுக்குள் நிறைவடையவுள்ளதாக புத்தளம் பெரிய பள்ளியின் நிர்வாக சபைத் தலைவர் அல்ஹாஜ் முஸம்மில் தெரிவித்தார்.

குறித்த வீடுகளுக்கான மின்சாரம் மற்றும் நீர் வசதிகளும் செய்து கொடுக்கப்படுமென அவர் மேலும் தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X