2025 ஜூலை 07, திங்கட்கிழமை

சிலாபத்தில் 21 கிலோ கஞ்சா மீட்பு

Menaka Mookandi   / 2013 ஜூன் 10 , பி.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.ஹிஜாஸ்

சிலாபம், காக்கைப்பள்ளி பிரதேசத்தில் 21 கிலோகிராம் கஞ்சா மீட்கப்பட்டதுடன் சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிலாபம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இவை கைப்பற்றப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் ஒரு கிலோவின் பெறுமதி சுமார் 23,000 ரூபாவென பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர் கடவத்தை பிரதேசத்தினை சேர்ந்தவரெனவும், சிலாபம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .