2025 மே 22, வியாழக்கிழமை

நுரைச்சோலையில் 25க்கும் மேற்பட்ட கடைகள் சுற்றிவளைப்பு

Kanagaraj   / 2013 பெப்ரவரி 24 , பி.ப. 01:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம். ஹிஜாஸ்

கற்பிட்டி, நுரைச்சோலை பகுதியில் 25க்கும் மேற்பட்ட கடைகள் கற்பிட்டி பிரதேச பொது சுகாதார அதிகாரிகளினால் சுற்றி வளைக்கப்பட்டது.

இதன் போது உணவு சட்டதிட்டங்களுக்கு மாறாக காணப்பட்ட உணவு பண்டங்கள் கைப்பற்றப்பட்டு அவைகள் அழிக்கப்பட்டதாக கற்பிட்டி பிரதேச பொது சுகாதார அதிகாரி தெரிவித்தார்.

பொதுச்சுகாதார அதிகாரிகளின் இச்சுற்றி வளைப்பு கடந்த வெள்ளிக்கிழமை நடைப்பெற்றதாகவும், இதன் போது ஹோட்டல்கள், பலசரக்கு கடைகள் உட்பட பல்வேறு வர்;த்தக நிலையங்கள் சோதனையிடப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதன் போது கைப்பற்றப்பட்ட பாவனைக்குதவாத பால்மா வகைகள், உணவு பொதிகள், டின்மீன்கள் உட்பல பல பொருட்கள் அழிக்கப்பட்டதுடன் கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

கற்பிட்டி பிரதேசத்தில் இவ்வாறான சுற்றிவளைப்புக்கள் தொடர்ந்து நடைப்பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X