2025 மே 20, செவ்வாய்க்கிழமை

சிறுமி துஷ்பிரயோகம்: குடும்பஸ்தருக்கு 39 வருடங்கள் சிறை

Kanagaraj   / 2013 மே 29 , பி.ப. 02:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

16 வயதிற்கும் குறைந்த சிறுமியை அவ்வப்போது துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இரண்டு பிள்ளைகளின் தந்தைக்கு கடுமையான வேலைகளுடன் 39 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தனது குற்றத்தை ஏற்றுக்கொண்ட 43 வயதான குடும்பஸ்தருக்கே வடமத்திய மேல் நீதிமன்ற நீதிபதி சுனந்த குமார ரத்னாயக்க மேற்கண்டவாறு தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

அத்துடன், 25 ஆயிரம் ரூபா வீதம் 75 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்ட அந்த பிள்ளைக்கு ஒரு இலட்சம் ரூபாய் நட்டஈட்டை செலுத்துமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்த தீர்ப்பு அறிவிக்கப்பட்ட நாளான இன்று குறித்த சந்தேகநபர் 10 வருடங்கள் சிறைத்தண்டனையை அனுபவித்திருந்தார்.
தனது மூத்த மகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்டமைக்கே அவர் இந்த 10 வருடங்கள் தண்டனையை அனுபவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

You May Also Like

  Comments - 0

  • IBNU ABOO. Thursday, 30 May 2013 03:18 PM

    வெட்கம்கெட்ட காமக் கயவர்களுக்கு நல்ல தண்டனை.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X