2025 ஜூலை 12, சனிக்கிழமை

பாலியல் வல்லுறவுச் சம்பவம்; 4 இராணுவத்தினருக்கு 12 வருட கடூழியச் சிறை

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 03 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

பெண்ணொருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய சம்பவத்தில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட இராணுவ வீரர்கள் நால்வருக்கு 15 வருடங்களுக்குப் பின்னர் தலா 12 வருட கடூழியச் சிறைத்தண்டணை விதிக்கப்பட்டுள்ளது.

வடமத்திய மாகாண மேல் நீதிமன்ற நீதவான் சுனந்த குமார நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இவ்வாறு தீர்ப்பளித்தார்.

இதற்கு மேலதிகமாக 25 ஆயிரம் ரூபா அபராதமும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தலா 50 ஆயிரம் ரூபா நஷ்டஈடு செலுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டார்.
 
அபராதத்தையும் நஷ்டஈட்டுத் தொகையையும் செலுத்தத் தவறும் பட்சத்தில் மேலும் 15 மாதங்கள் சிறையிலிடுமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .