2025 மே 21, புதன்கிழமை

ஆஸி. செல்ல முற்பட்ட 42 பேர் கைது

Suganthini Ratnam   / 2013 மே 16 , மு.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.ஹிஜாஸ்

அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முற்பட்ட 42 பேர் ஹோட்டலொன்றில் தங்கியிருந்தபோது இன்று வியாழக்கிழமை   அதிகாலை சிலாபம் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் 28 ஆண்களும் 5 பெண்களும் 9 சிறுவர்களும் அடங்குகின்றனர்.

இவர்கள் யாழ்ப்பாணம் மற்றும் குருநகர் பகுதிகளைச் சேர்ந்த 4 குடும்பங்களைச் சேர்ந்தவர்களெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

நீர்கொழும்பு மீன்பிடி துறைமுகத்துக்கு வரவிருந்த ஆழ்கடல் மீன்பிடிப் படகொன்றை   இவர்கள் எதிர்பார்த்து காத்திருந்ததாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

இந்;தப் பயணத்திற்காக 500,000 ரூபாவிலிருந்து ஒரு மில்லியன் ரூபாவரை முகவர் அறவிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். (அகோஸ்ட்டின் பெர்னாண்டோ)

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X