2025 மே 21, புதன்கிழமை

கற்பிட்டியில் 78 குடும்பங்களுக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கிவைப்பு

Kanagaraj   / 2013 மே 03 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}




-எம்.என்.எம். ஹிஜாஸ்


கற்பிட்டி பிரதேசத்தின் காணிகளற்ற 78 குடும்பங்களுக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை மாலை கள்பிட்டி பிரதேச செயலகத்தில் நடைப்பெற்றது.

கல்பிட்டி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நாச்சிகள்ளி, நரக்கள்ளி, கண்டக்குடா, பனையடி, தலவில ஆகிய கிராம சேவகர் பிரிவுகளிலுள்ள சுமார் 35 ஏக்கர் அரச நிலங்களுக்கே இவ்வாறு உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டன.

இந் நிகழ்வில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விக்டர் அன்டனி பெரேரா, கற்பிட்டி பிரதேச சபைத்தலைவர் எம்.எச்.எம். மின்ஹாஜ், கற்பிட்டி பிரதேச செயலாளர் ரங்கன பெர்ணான்டோ, கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X