2025 மே 06, செவ்வாய்க்கிழமை

4,510 கி.கி அரிசி அழிப்பு

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 17 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

- முஹம்மது முஸப்பிர்

புத்தளம் நகரில் மனித பாவனைக்கு உதவாத 4,510 கிலோகிராம்  அரிசி, புத்தளம் மாவட்ட பதில் நீதிபதியும் நீதவானுமாகிய செல்வி பாரதி விஜயவர்தன முன்னிலையில் இன்று வியாழக்கிழமை (17) புத்தளம் அரசாங்க உணவுக் களஞ்சியசாலைக்கு அருகில் புதைக்கப்பட்டது.

இதன்போது கீரி சம்பா 1,275 கிலோகிராம் , நாட்டரிசி 1,115 கிலோகிரம் மற்றும் மிக மோசமான முறையில் பழுதடைந்திருந்த 2,120 கிலோகிராம் அரிசிமே இவ்வாறு அழிக்கப்பட்டது.   

புத்தளம் மாவட்ட நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து அவ்வதிகாரிகள் கடந்த 07ஆம் திகதி மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது இந்த அரிசி மீட்கப்பட்டதாக நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகள் தெரிவித்தனர்.  

இதனைத் தொடர்ந்து மறுநாள், அரிசியின் உரிமையாளரை புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியிருந்ததுடன், கைப்பற்றப்பட்ட அரிசியையும் முன்னிலைப்படுத்தினர். 

அரிசி உரிமையாளருக்கு 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதுடன், கைப்பற்றப்பட்ட அரிசியை அழிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X