Thipaan / 2017 மே 12 , மு.ப. 07:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஸீன் ரஸ்மின்
கற்பிட்டி பத்தலங்குண்டு தீவுப்பகுதியில் இருந்து, புதன்கிழமை காலை கடலுக்குச் சென்று காணாமற்போன மீனவர் தொடர்பில் தகவல் எதுவும் கிடைக்கவில்லை எனவும், அவரைத் தேடும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கற்பிட்டி பத்தலங்குண்டு காரைதீவு வேலாங்கன்னி மீனவர் சங்கத்தலைவர் அன்ரனி பொன்சேகா, இன்று (12) தெரிவித்தார்.
கற்பிட்டி பத்தலங்குண்டு பள்ளிவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த வர்ணகுலசூரிய ஜோசப் பெர்ணான்டோ
(வயது 55) என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டார்.
"கடந்த புதன்கிழமை காலை, பத்தலங்குண்டு பள்ளிவத்தைப் பகுதியிலிருந்து இரண்டு மீனவர்கள் சிறிய படகு ஒன்றில் கடலுக்குச் சென்றுள்ளனர்.
இரண்டு மீனவர்களும் பயணித்த சிறிய படகு கடற்பகுதியில் விபத்துக்குள்ளாகியமையினால் இரண்டு மீனவர்களும் நீரில் மூழ்கியுள்ளனர்.
இவ்வாறு படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகிய போது, இரண்டு மீனவர்களில் ஒருவர் சம்பவம் இடம்பெற்ற சொற்ப நேரத்தில் ஏனைய மீனவர்களினால் மீட்கப்பட்டுள்ள போதிலும் மற்றைய மீனவர் அலையில் அள்ளுண்டு காணாமல் போயிந்தார்.
காணாமல் போன மீனவரைத் தேடி கற்பிட்டி கடற்படையினரும் பொலிஸாரும் மீனவர்களும் கூட்டாக இணைந்து கடந்த புதன்கிழமை முதல் முழுநாளும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எனினும், குறித்த மீனவர் காணாமல் போய் மூன்று நாட்கள் கடந்துள்ள நிலையில் எந்தவிதமான தகவல்களும் கிடைக்கவில்லை எனவும், தேடுதல் நடவடிக்கைகள் தொடர்கிறது" என அவர் மேலும் கூறினார்
குறித்த மீனவரைத் தேடி கடற்பகுதிகளில் கற்பிட்டி கடற்படையினரும் பொலிஸாரும் பத்தலங்குண்டு மீனவர்களும் கூட்டாக இணைந்து தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பத்தலங்குண்டு தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
12 minute ago
15 minute ago
33 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
15 minute ago
33 minute ago
40 minute ago