2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

ஜன்னலை கதவாக்குவதால் அச்சம்

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 27 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

- ஹிரான் பிரியங்கர ஜயசிங்க

ஜன்னல்களை கழற்றிக்கொண்டு வீடுகளுக்குள் உள்நுழையும் இனந்தெரியாத நபர்கள், அவ்வீட்டினுள் இளம் பெண்கள் தங்கியிருக்கும் அறைகளை நோட்டமிடுவதுடன், ஆடைகளை அள்ளி உதறிவிடுவதனால், இளம்பெண்கள் இருக்கின்ற வீடுகளைச் சேர்ந்தவர்கள் பெரும் அச்சத்துடன் இருக்கவேண்டிய நிலைமை புத்தளம் தில்லடிய பகுதியில் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான பல சம்பவங்கள் தொடர்பில் தங்களுக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அறிவித்த புத்தளம் பொலிஸ் நிலைய குற்ற விசாரணைப் பிரிவு, இந்த சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றது. 

நில்லடி பிரதேசத்தில் உள்ள வீடுகளில் ஒரே இரவில், ஜன்னல்களை கழற்றிக்கொண்டு வீடுகளுக்குள் நுழையும் இனந்தெரியாத குழுவினர், அந்த வீடுகளில் பெண்கள் தங்கியிருக்கும் அறைகளை நோட்டமிட்டுள்ளனர் என்று பொலிஸில் செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான செயற்பாடுகள் காரணமாக தாங்கள், அச்சமடைந்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். சில வீடுகளுக்குள் நுழையும் இந்த இனந்தெரியாத குழுவினர், நுளம்பு வலைகளையும் அறுத்தெறிந்துவிட்டு சென்றுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X