2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

'பால்நிலை கல்வியின்மையால் துஷ்பிரயோகங்கள் அதிகரிப்பு'

Gavitha   / 2015 ஒக்டோபர் 13 , மு.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

நகர் புறங்களை விடவும் கிராமபுரங்களில் வாழ்கின்ற சிறுவர்களில் பெரும்பாலானோர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகிவருகின்றனர் என்று அநுராதபுரம் விசேட மேல் நீதிமன்றத்தின் நீதிபதி ஹேமா சுவர்ணாதிபதி சுட்டிக்காட்டினார்.

அநுராதபுரம் விசேட மேல் நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்டுள்ள புதிய வழக்குகளில், 25 வழக்குகள், அப்பா, சித்தப்பா மற்றும் மாமா ஆகியோரினால் பிள்ளைகள் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவங்களை அடிப்படையாக கொண்டவையாகும்.

வரண்ட வலயத்திலேயே இவ்வாறான துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகரித்துள்ளன. அதற்கு பலகாரணங்கள் உள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

பெற்றோர் கல்விக்கற்காமை பிரதான காரணமாகும். சிறுவர்களை கூடுதலாக தொழிலுக்கு அமர்த்திகொள்ளுதல், குறைந்த வயதில் திருமணம், திட்டமிடாத குழந்தை பிறப்பு மற்றும் வறுமை போன்றவையே பிரதான காரணமாகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சிறுவர்கள் ஒரு தடவையல்ல, பல தடவைகள் இவ்வாறான துஷ்பிரயோகங்களுக்கு உள்ளானவர்களாக இருக்கின்றனர்.

அது பிழையென்பதை தெரிந்து கொள்வதற்கு அவர்களுக்கு முடியாதுள்ளது. நாட்டில் இருக்கின்ற பல்வேறான உப-கலாசாரத்துக்குள் சிக்கி அவர்கள் சின்னாபின்னமாகிவிடுகின்றனர். குறைந்த வயதில் திருமணம் முடித்தல் இவ்வாறான சமூகத்தில் சாதாரணமாகிவிட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

துஷ்பிரயோக வழக்கொன்றின் போது, பாட்டியொருவர் கூறினார். இது எங்கள் குடும்ப பிரச்சினையாகும், இதற்குள் நீதிமன்றங்கள் மற்றும் அரச நிறுவனங்கள் தலையிடவேண்டியதில்லை என்றார்.

அந்த வழக்கில் பாதிக்கப்பட்டிருக்கும் பிள்ளையும், வழக்கின் பிரதிவாதியும் ஒரே குடும்பத்தைச்சேர்ந்தவர்களாவர்.

சிலவேளைகளில் அந்த பிள்ளை, வழக்குகாகவே நகரத்துக்கு முதன்முறையாக வந்திருக்கின்றார் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அவ்வாறானவர்கள் கிராமங்களில் வாழ்கின்றனர். அவர்களிடத்தில் சுத்தம் இருக்காது. மலசலகூடத்துக்கு செல்ல தெரியாது.  தேவையான சுகாதார வசதிகளை கொண்டிருக்க மாட்டார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X