2025 மே 06, செவ்வாய்க்கிழமை

03 வருடங்களின் பின்னர் இராணுவ வீரர் கைது

Princiya Dixci   / 2016 ஜனவரி 21 , மு.ப. 08:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமார் மூன்று வருடங்களுக்கு முன்னர் கலென்பிந்துனுவௌ பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்த 143,000 ரூபாய் பெறுமதியான தங்க நகைகளைக் கொள்ளையிட்டுத் தப்பித்துச் சென்ற இராணுவ வீரரொருவரை, நேற்று புதின்கிழமை (20) கைதுசெய்துள்ளதாக கலென்பிந்துனுவௌ பொலிஸார் தெரிவித்தனர். 

அநுராபுரம், சாலியபுர முகாமில் இருந்து தப்பித்துச் சென்ற இராணுவ வீரரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான விசாரணைகளின் பின்னர் சந்தேகநபரை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக கலென்பிந்துனுவௌ பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X