2025 மே 06, செவ்வாய்க்கிழமை

' ஸ்ரீ.க.வை முன்னாள் ஜனாதிபதி பிளவுப்படுத்த முயற்சிக்கிறார்'

Kogilavani   / 2016 மார்ச் 08 , மு.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.என்.எம். ஹிஜாஸ்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிளவுப்படுத்தும் நடவடிக்கையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஈடுபட்டு வருவதாக  இராஜாங்க அமைச்சர் பாலித ரஙக பண்டார நேற்று(7) தெரிவித்தார்.

'நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வரப்பிரசாதங்களை அள்ளி வழங்கி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி போன்ற கட்சிகளை பிளவுப்படுத்திய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இன்று சுதந்திரக் கட்சி தலைமைத்துவ பதவியிலிருந்து நீக்கப்பட்ட பின்னரும்  அக்கட்சியை பிளவுப்படுத்துகிறார். அவர் சுதந்திர கட்சியை பிளவுப்படுத்தினால் ஐக்கிய தேசிய கட்சியினராகிய நாம், அவருக்கு நன்றி கூற வேண்டும்' என   அவர் மேலும் கூறினார்.

நீண்டகாலமாக சேதமாகிய நிலையில் காணப்படும் புத்தளம், மதுரங்குளி வீதியானது, 30 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்படவுள்ளது. இவ்வீதியின் புனரமைப்பு பணிகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே அவர்

மேற்கண்டவாறு கூறினார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'கடந்த அரசாங்கத்தின் காலத்தில் வீதிகள் காபட் இடப்பட்டன.  அவற்றின் செலவீனங்களில் 65 வீதம் மட்டுமே செலவிடப்பட்டதுடன் 35 வீதத்தை தமது பைக்குள் போட்டுக்கொண்டார்கள். இதனால் புனரமைக்கப்படும் வீதிகள் குறுகிய காலத்தில் சேதமாகிவிடுகின்றன. எனவே புனரமைக்கப்படவுள்ள இவ்வீதியானது, சிறந்த முறையில் செப்பனிடப்பட வேண்டும்' என்றார்.

இந்நிகழ்வில் வடமேல் மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளூர் அரசியல் பிரமுகர்கள், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் என பலரும்; கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X