Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2021 பெப்ரவரி 24 , பி.ப. 02:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவர்கள், சுகாதார சேவைகள் திணைக்களத்தில் உள்வாங்கப்பட மாட்டார்கள் என்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் தொழில் பெற்றுள்ளவர்கள், நிரந்தர ஊழியர்களாக சுகாதார சேவையில் உள்வாங்கப்படவுள்ளனர் என பரவிவரும் வதந்தி, முற்றிலும் தவறானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியுடன் இணைந்த தொழிற்சங்க சம்மேளனத்தின் பிரதிநிதிகளுடனான சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (23) மாலை நடைபெற்றது.
இவ்வாறானதொரு கருத்து சுகாதார ஊழியர்களுக்கு மத்தியில் பரவிவருவதாக, தொழிற்சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்தபோது, அதற்கு பதிலளிக்கும் வகையிலேயே, ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு நிகழ்ச்சித் திட்டம், மிகக் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களில் இருந்து தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி, அவர்களை வறுமையிலிருந்து விடுவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் முறையான கல்வி அல்லது தொழில்முறை தகுதிகள் அல்லது திறன்கள் இல்லாதவர்கள் மட்டுமே அத்திட்டத்துக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பணியாளர்களுக்கு மருத்துவமனைகள், பாடசாலைகள், பல்வேறு அரச நிறுவனங்களில் தொழிலாளர்கள், துப்புரவு பணிகளில் ஈடுபடும் ஊழியர்கள் மற்றும் இயந்திர இயக்குநர்களாக பயிற்சி அளிக்கப்படும் என்றும் பயிற்சிக்குப் பின்னர், அவர்களுக்கு அந்தந்த நிறுவனங்களில் நிரந்தர நியமனங்கள் வழங்கப்படும் என்றும் இருப்பினும், அவர்கள் சுகாதார சேவையில் உள்வாங்கப்பட மாட்டார்கள் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
9 minute ago
13 minute ago
23 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
13 minute ago
23 minute ago